திருவருகைக்காலம் முதல் ஞாயிறு – Responsorial Psalm For First Sunday Of Advent
திருவருகைக்காலம் முதல் ஞாயிறு – Responsorial Psalm For First Sunday Of Advent
பதிலுரைப் பாடல்
திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9
அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்
1.ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோத அகமகிழ்ந்தேன்.
2.எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.
3.எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.
4.ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்டகட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5.அங்கே நீதி வழங்கஅரியணைகள் இருக்கின்றன அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.
6.எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7.உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!
8.உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9.நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.
Agamagilvodu Aandavarathu Illathirkku povom song lyrics