Puthiyaa Varudam Thantha deva song lyrics – புதிய வருடம் தந்த தேவா
Puthiyaa Varudam Thantha deva song lyrics – புதிய வருடம் தந்த தேவா
புதிய வருடம் தந்த தேவா
புதிய வாக்குகள் தந்து உயிர்ப்பியும்
புதிய கிருபை புது அபிஷேகம்
புதிய தரிசனம் தந்து நடத்திடும்-2
(புது)வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர்
பாதைகள் நெய்யாய் பொழிகின்றதே -2
முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
புதிய காரியம் செய்வேன் என்றீர்
இப்பொழுதே தோன்றச் செய்திடும்-2
யாக்கோபே நீ பயப்படவேண்டாம்
இஸ்ரவேலே நீ கலங்கிடவேண்டாம்
உன்னோடே கூட இருப்பேன் என்றீர்
என் தேவன் என் சார்பில் எழுந்தருளிடும்-2
பெலவானை கண்டு சோர்ந்திட வேண்டாம்
பெலவீனன் என்று எண்ணிட வேண்டாம்
பெரிய பர்வதம் சமமாகும் என்றீர்
மலைகள் அனைத்தும் வழிகளாக்கிடும்-2
செங்கடலைக் கண்டு அஞ்சிட வேண்டாம்
யோர்தானைக் கண்டு திரும்பிட வேண்டாம்
உள்ளங்கால் பட பிரிந்திடும் என்றீர்
உலர்ந்த தரைவழியாக நடத்திடும்-2