Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ

Deal Score0
Deal Score0

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ

பூந்தென்றலே அசைந்தாடாயோ?
இயேசப்பா புகழ் பாடாயோ?
ஆகாயம் ஆழ்கடலை
அளவில்லா விண்மீனைப்
படைத்தோரைப் பாடுவாயா?

  1. இயேசு போல் ஒரு தேவன் இக இகமதில் உண்டோ சொல்
    கண்ணே மணியே கூறிடாயோ?
    உம்மில் அன்பு கண்டேன் -உம்மில்
    ஆற்றல் கண்டேன் -அதிசய
    செயல்கள் கண்டேன்
  2. உலகம் தரக்கூடா சமாதானம் தருவாரே
    கண்ணே மணியே உணர்ந்திடாயோ?
    உன்னை காத்திடுவார் -உன்னை
    மேய்த்திடுவார்
    உயர்த்திடுவார் என்றுமே
  3. மலையின் மேல் நிற்கின்ற பட்டணமாய் மாறிட
    கண்ணே மணியே விரும்பிடாயோ
    இந்த மண்ணில் மழையாய் -உண்ணும்
    உணவில் உப்பாய்
    இருந்திட தீர்மானிப்பாய்
  4. அறியாமை நீக்கிடும் அகல்விளக்காய் ஒளிர்வாயா?
    கண்ணே மணியே நிலை நிற்பாயா?
    உன்னில் ஒளி வீசட்டும்
    ஆவியின் கனி காய்க்கட்டும்
    தேவன்பை பிறர் காணட்டும்.
Jeba
      Tamil Christians songs book
      Logo