Pogum Paathai Enakku theriyathu song lyrics – போகும் பாதை எனக்கு
Pogum Paathai Enakku theriyathu song lyrics – போகும் பாதை எனக்கு
போகும் பாதை எனக்கு தெரியாது
நான் அலைந்து திரிந்தேனே-2
சொந்தமும் பந்தமும் விரட்டி தள்ளியது
பந்த பாசம் என்னை கேலி செய்தது -2
என் வாழ்வில் உறக்கம் இல்லையே
என்னைத் தேடி இயேசு வந்தாரே-2
என் குணம் மாறியது என் மனம் மாறியது
என் உடை மாறியது என் நடை மாறியது
இயேசு செய்த நன்மைக்காக பாடுகின்றேனே -2
வனாந்திர பாதையிலே ஆகாரின் கண்ணீரைக் கண்டு
பெயர் சொல்லி அழைத்தீரே என் இயேசு ராஜனே-2
என் மீது இரக்கப்பட்டு என்னை தூக்கி சுமந்தீரே -2
இயேசு தந்த புகழுக்காக பாடுகின்றேனே-2
உலக அன்பு எல்லாம் ஒரு நாள் மாறிபோகும்
இயேசுவின் அன்புஒன்றே உன் வாழ்வில் என்றும் நிற்கும்-2
சொந்தம் பந்தம் பாசம் எல்லாம் எல்லாமே சும்மா சும்மா -2
இயேசு தந்த அன்புக்காக பாடுகின்றேனே -2