Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே

Deal Score0
Deal Score0

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே

பரம தகப்பனே நடத்தி வந்தீரே
வெட்கப்பட்டு மடிந்திடாமல் காத்து வந்தீரே
எங்கள் பரம தகப்பனே நடத்தி வந்தீரே
குழியில் விழுந்து மடிந்திடாமல் மீட்டு கொண்டீரே

நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்
என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர்
நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்
என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர்

1.ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரே
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரே
எத்தனை மனிதர் எழும்பினாலும் நீர் என்னோடு இருக்கிறீர்
என் துரவுகளை தூர்த்து போட்டாலும் ஜீவநீரூற்றாய் வருகிறீர்
எத்தனை மனிதர் எழும்பினாலும் நீர் என்னோடு இருக்கிறீர்
என் துரவுகளை தூர்த்து போட்டாலும் ஜீவநீரூற்றாய் வருகிறீர் – பரம தகப்பனே

2.மோசேயின் தேவனே யோசுவாவின் தேவனே
இஸ்ரவேலின் தேவனே விடுவிக்க வல்லவரே
மோசேயின் தேவனே யோசுவாவின் தேவனே
இஸ்ரவேலின் தேவனே விடுவிக்க வல்லவரே
நீ உயிரோடிருக்கும் நாளளவும் ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை
நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடு இருப்பேன் என்றீர்
நீ உயிரோடிருக்கும் நாளளவும் ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை
நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடு இருப்பேன் என்றீர் -பரம தகப்பனே

Parama Thagapanae Nadathi vantheerae

Jeba
      Tamil Christians songs book
      Logo