Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள்
Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள்
ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் என்னை தாங்கினது சுமந்தது உங்க வார்த்தை தான் ஐயா
வார்த்தையே வேத வார்த்தையே
என்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2
- என் பெலன் ஒன்றும் இல்லை என்று அறிவேன்
அவர் பெலன் என்றும் குறையவில்லை அறிவேன் -2
பலத்தினாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல -2
வார்த்தையினால் என்னை எழும்பச் செய்தீர் -2
வார்த்தையே வேத வார்த்தையே
என்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2
- தனிமையில் நான் அழுதபோதெல்லாம் தாய்போல தேற்றியது உம் வார்த்தை தான் ஐயா -2
தேவைகளில் நான் திகைத்தபோதெல்லாம்-2
ஒரு தகப்பன் போல சுமந்தது உம் வார்த்தை தான் ஐயா-2
வார்த்தையே வேத வார்த்தையே
என்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2
ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் என்னை தாங்கினது சுமந்தது உங்க வார்த்தை தான் ஐயா