Nenjam Nirai Nantriyinai Nathanai song lyrics – நெஞ்சம் நிறை நன்றியினை நாதனை
Nenjam Nirai Nantriyinai Nathanai song lyrics – நெஞ்சம் நிறை நன்றியினை நாதனை
நெஞ்சம் நிறை நன்றியினை நாதனை உனக்கு தருகின்றேன்
தஞ்சம் தந்த தெய்வமே நின்தாள் பணிந்து வருகிறேன்
நன்றி சொல்ல விழைகின்றேன் நாவால் பாடல் இசைகின்றேன்
- தாயின் கருவில் தேர்ந்தாய் சேயாய் என்னை காத்தாய்
தாகம் யாவும் தீர்த்தாய் தரணி உயரச் செய்தாய்
உந்தன் அன்பை சுவைத்தேன்
எந்தன் எண்ணம் நினைந்தேன்
உலகம் மறந்து நின்றேன்
2.கரத்தில் பெயரை பொறித்தாய் கழுகை போல சுமந்தாய்
கலக்கம் யாவும் கரைத்தாய் கனிவாய் அள்ளி அணைத்தாய்
உன்னை எண்ணி வியந்தேன்
எந்தன் உள்ளம் மகிழ்ந்தேன்
உறவும் மலர்ந்து நின்றேன்
Nenjam nirai sing by Fr. Victor நன்றிப் பாடல் நெஞ்சம் நிறை