Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம்
Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம்
நீரே என் நோக்கம்; என் ஆத்ம நாதா
நீர் மாத்திரம் போதும் மற்றொன்றும் வேண்டேன்
நாளெல்லாம் நீர் என் நல் தியானமாமே
நாதா உம் பிரசன்னம் வெளிச்சமே
நீரே என் ஞானம்; மெய் வசனமும்
நான் என்றும் உம்மோடு நீர் என்னோடும்
நீரே என் தந்தை நான் உந்தன் பிள்ளை
நீர் என்னில் தங்கும் நான் உம்மில் வாழ்வேன்
செல்வமும் வேண்டாம்; வீண் புகழ்ச்சியும்
நீரே என்றென்றும் என் சுதந்தரம்
நீர் நீரே என்தன் முதல் விருப்பம்
உன்னத ராஜன் நீர் என் பொக்கிஷம்
உன்னத ராஜன்; என் ஆத்ம நேசர்
விண் ஜோதி நீர் எங்கும் என் வாழ்வினில்
என்ன வந்தாலும் உம் பிரசன்னத்தால்
ஆட்கொள்ளும் சருவ லோகாதிபா
Be Thou my vision song translation in Tamil version