Neenga Seitha nanmaigal new year song lyrics – நீங்க செய்த நன்மைகள் ஆயிரங்கள்
Neenga Seitha nanmaigal new year song lyrics – நீங்க செய்த நன்மைகள் ஆயிரங்கள்
நீங்க செய்த நன்மைகள் ஆயிரங்கள் நன்றியோடு துதித்திடுவேன் – 2
துதித்திடுவேன் துதித்திடுவேன் உயிருள்ள நாளெல்லாம் துதித்திடுவேன்
கடந்த நாட்கள் முழுவதும் என்னை கண்ணின் மணி போல் காத்தவரே-2
என் கரம் பிடித்து தூக்கி எடுத்து
நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்-2
துதித்திடுவேன் துதித்திடுவேன் கரம் பிடித்தவரே துதித்திடுவேன்.
மனிதர் தடுத்த நன்மைகள் யாவும் எனக்காய் திறந்து கொடுத்தவரே எனக்கெதிரான ஆயுதங்கள் அழிந்து போக செய்தவரே
துதித்திடுவேன். துதித்திடுவேன். வாசலை திறந்தீர் துதித்திடுவேன்.
இரத்த வெள்ளத்தில் மரித்துப்போய் இருந்தேன் பிழைத்திரு என்று சொன்னவரே-2
உம் இரத்தத்தால் என்னை கழுவி நீதிமானாக மாற்றினீரே.
துதித்திடுவேன் துதித்திடுவேன்
நீதிமானாய் மாற்றினீரே துதித்திடுவேன்.