நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin
நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்மைகளின் நாயகரே
எத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரே
எல்லையில்லா
கிருபையால் என்னை காத்து வந்தவரே
கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்ல
ஆனாலும் உங்க கிருபை எனக்கு போதுமே
அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே -கையிலேயும் (1)
கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து திரிந்தேனே
கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே-2
கல்வாரி இரத்தத்தினால் சொந்தமாக்கி கொண்டவரே
கண்மலை தேனினால் என்னை திருப்தியாக்கினீரே
கண்மணி போல் காத்து என்னை நடத்தி வந்தவரே -கையிலேயும் (2)
சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும்
உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும் -2
சொந்தமாக்க தேடி வந்தீர் சத்தியத்தால் மீட்டுக்கொண்டீர்
உங்க பிள்ளையாய் என்னை வாழ வச்சவரே
உம்மையே உயர்த்தி தினம் பாடவச்சவரே -கையிலேயும் (3)
பெலத்த கரத்துல நானும் அடங்கியிருப்பேனே
உங்க சொல்ல கேட்டு தா நானும் தினமும் நடப்பேனே-2. எண்ணில்லாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே-2
உங்க தோளில் சுமந்து என்னை காத்து வந்தவரே
உங்க வார்த்த சொல்ல என்ன ஓட வச்சவரே
கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்ல
ஆனாலும் உங்க கிருபை எனக்கு போதுமே
அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே
நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே
எத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரே
எல்லையில்லா கிருபையால் என்னை காத்து வந்தவரே