Nandri Nandri Nandri Yesuvae Entrum song lyrics – நன்றி நன்றி நன்றி இயேசுவே
Nandri Nandri Nandri Yesuvae Entrum song lyrics – நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி இயேசுவே – என்றும்
நன்றி நன்றி நன்றி இயேசுவே
குழந்தை வயதில் தவழ்ந்த போதெல்லாம் – என்
தாய் வழியாய் என்னைக் காத்தீரே
நட்புத் தேடி ஏங்கிய போதெல்லாம் – என்
நண்பனாகக் கூட வந்திரே
அன்பைத் தேடி அலைந்த போதெல்லாம் – என்
துணைவராக என்னுள் நுழைந்தீரே
முயற்சி செய்தும் தோற்ற போதெல்லாம் – என்
தோழனாக உதவி செய்தீரே
துன்பக் கடலில் விழுந்த போதெல்லாம் – என்
தந்தையாக தோளில் சுமந்தீரே
நோய்கள் தாக்கி நொந்த போதெல்லாம் – என்
மருத்துவராக விரைந்து வந்தீரே
பாவச் சேற்றில் புதைந்த போதெல்லாம் – என்
குருவின் வழியாய் அருளைத் தந்தீரே
முதுமைச் சிறையில் வாடிய போதெல்லாம் – என்
குழந்தை வடிவில் மடியில் சாய்ந்தீரே
நன்றி நன்றி Nandri Nandri Bhajan sung by Peter Leon | Philip Xavier Thanks Giving Song