Nalamodu Naan Vaazha Vazhi song lyrics -நலமோடு நான் வாழ வழி
Nalamodu Naan Vaazha Vazhi song lyrics -நலமோடு நான் வாழ வழி
நலமோடு நான் வாழ வழி காட்டம்மா – எனை
நாள்தோறும் நீ வளர்த்து பலன் ஊட்டம்மா
தாயே மரியே அன்புத் தாயே மரியே
அருந்துங்கள் அன்போடு எனக் கூறியே – உன்
அருமைந்தன் அளிக்கின்ற உணவூட்டம்மா
இறைவார்த்தை சுரங்கத்திற்கெனை கூட்டிப்போம் – அங்கே
இருக்கின்ற செல்வங்கள் நீ காட்டம்மா
வழிமாறி தடுமாறி நான் வீழ்ந்திட
வரும் வழிமாற உனதன்பு மருந்தூட்டம்மா
பிழையாவும் பொருத்தென்னை ஏற்றுக் கொள்ள
தினம் வழிபார்த்து நிற்கும்உன் மகன் காட்டம்மா
Nalamodu naan Mother Mary song Tamil