நான் தான் சாத்தான் – Naan Thaan Sathaan song lyrics

Deal Score0
Deal Score0

நான் தான் சாத்தான் – Naan Thaan Sathaan Tamil Christian Song Music, lyrics, tune and sung by Michael Samraj. Composer Thought.

பல்லவி

முட்டைக் கண்ண உருட்டிக்கிட்டு
கொள்ளி வாயக் காட்டிக்கிட்டு
நாக்கத் தொங்க போட்டுக்கிட்டு
கருப்பு கவுனப் மாட்டிக்கிட்டு
தலையில் ரெண்டு கொம்போட
இருப்பேன்னு நினைக்காதே

பாஸ்டர் போல நானிருப்பேன் பாதிரியார் போலிருப்பேன்
சாந்தமான முகத்தோடு சாதுவைப் போல் நானிருப்பேன்
உலகத்திலே உயர்வான ஊழியக்காரன் போலிருப்பேன்
நாகரீகப் பேச்சாலே நவரசமாய் ஆடிப் பாடி
ஆண்டவரின் பேரைச் சொல்லி ஆட்டையைத் தான் போட்டிடுவேன்
ஆளுகள செட்டப் பண்ணி அதிசயங்கள் நடக்குதென்பேன்

அனுபல்லவி

நான் தான் சாத்தான்-2

சரணம் 1
சி எஸ் ஐ என்றாலும் ஆர் சி என்றாலும்
பெந்தேகோஸ்தே என்றாலும் எந்த சபையானாலும்
சபைகளில் பாகுபாடு நான் மட்டும் பார்ப்பதில்லை
நியாயம் எனக்கு இல்லை தர்மத்திற்கு நான் எதிரி
பொய்யும் புரட்டும் எனக்கு வாய் திறந்தால் வந்து விழும்
வசனத்தைப் புரட்டிப் பேசும் வித்தைக் காரன் நான் தானே

சரணம் 2

இச்சை அடக்கத்தையே இல்லாமல் செய்திடுவேன்
பதவி ஆசை காட்டி பாதியிலே மடங்கடிப்பேன்
கடவுளை விட்டு விலக்கி வைத்திருப்பேன்
கள்ளப் போதனைகள் கணக்கில்லாமல் உருட்டிடுவேன்
கள்வர் கூட்டம் ஒன்றை கச்சிதமாய் வைத்திருப்பேன்
கர்த்தரின் ஆலயத்தை கள்ளர் குகையாக்கிடுவேன்

Naan Thaan Sathaan Song lyrics

நான் தான் சாத்தான் song lyrics, naan thaan sathaan song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo