Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை

Deal Score0
Deal Score0

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை

நான் ஒன்றுமே இல்லை என் ( தகப்பனே) இயேசய்யா
நீரே எனக்கு எல்லாம் -2

உங்க நேசம் எத்தனை இன்பமானது
உங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2

ஒன்றுக்கும் உதவாதவனென்று
என்னை பலர் தூக்கி எறிந்தனரே – 2
நீ எனக்கு வேண்டும் என்று சொல்லி
என்னை மார்போடு அணைத்தவரே – 2

உங்க நேசம் எத்தனை இன்பமானது
உங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2

துன்பத்தின் பாதையில் நான் நடந்தேன்
துயரத்தின் தண்ணீரையும் கடந்தேன் – 2
சத்துருமுன் வெட்கி போய்க் கிடந்தேன்
என்னை நீரூம் தேடி வந்தீரே – 2

உங்க நேசம் எத்தனை இன்பமானது
உங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2

அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்தேன்
அதை நீரூற்றாய் மாற்றியும் நான் கொண்டேன் – 2
மாராவின் தண்ணீரும் கூட
என் வாழ்வில் மதுரமாகுமே

உங்க நேசம் எத்தனை இன்பமானது
உங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2

Naan Ontrumae illai En Thagapanae song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo