மீதி வாழ்க்கை உமக்காக – Meedhi Vaazhkai Umakkaga

Deal Score0
Deal Score0

மீதி வாழ்க்கை உமக்காக – Meedhi Vaazhkai Umakkaga Tamil Christian Song lyrics, Written, Composition and Sung by Joel Elijah & Solomon Jakkim

ஏன் ஏனோ இத்தனை வலிகள்
அத்தனையும் தாங்கிக் கொள்ள இதயம் போதாது – 2

தாங்க முடியவில்லை
என்னால் சுமக்க முடியவில்லை
புரிந்து கொள்வார் இல்லை
என்னை அணைக்க யாரும் இல்லை
அன்பை தேடி நான் அலைந்தேன்

கண்களில் கண்ணீர் துளிகள் துடைக்க யாருமில்லை
என்று நான் ஏங்கி கிடந்தும் அன்பு கிடைக்கவில்லை
என் சார்பில் பரிந்து பேச இங்கு எவரும் இல்லை
எதற்கு நான் பிறந்தேன் என்ற நோக்கம் தெரியவில்லை

வாழ்க்கை போதும் நான் முடித்துக் கொள்வேன் என்று
கதறி அழுத அந்நேரத்திலே
போகும் தூரம் வெகு தூரம் என்று
அணைக்கும் கரத்தால் என் விழி துடைத்தீர்.

ஏன் என் மேல் இத்தனை அன்பு
அதின் ஆழம் புரிந்துக்கொள்ள இதயம் போதாது
ஏன் என் மேல் இத்தனை தயவு
தகுதியற்ற என்னை உம் மகனாய் சேர்த்தது

இனம் புரியா அன்பு இது
இணை இல்லா இன்பம் இது
இதை அறிந்தேன் இப்பொழுது
இனிதாகும் முப்பொழுது

நீரே என் பரிகாரி என்று நான் அறியாமல்
நாட்களைத் தொலைத்தேன் உம் அன்பை நான் உணராமல்
தாமதிப்பதில்லை இனி நான் மீதி வாழ்க்கை உமக்காக
பாவம் செய்வதில்லை இனி நான் பாடுவேன் என் மனதார

மீதி வாழ்க்கை உமக்காக song lyrics, Meedhi Vaazhkai Umakkaga song lyrics, Tamil songs

Meedhi Vaazhkai Umakkaga song lyrics in English

Yean Yeno Iththanai Valigal
Aththanaiyum Thangi Kolla idhayam pothathu -2 (Meethi Vaalkkai Umakkaga)

Thaanga Mudiyavillai
Ennaal Sumakka Mudiyavaillai
Purinthu kolvaar Illai
Enani Anaikka Yaarum Illai
Anbai theadi naan alainthean

Kankalil Kanneer thuligal Thudaikka yaarumillai
Entru Naan Yeangi Kidanthum Anbu Kidakkavillai
En Saarbil Parinthu pesa Ingu Evarum Illai
Etharkku Naan Piranthean Entra nokka theriyavillai

Vaalkkai Pothum Naan Mudithu Kolvean entru
Kathari Alutha Annerathilae
Pogum Thooram Vegu Thooram Entru
Anaikkum Karathaal En vizhi Thudaitheer

yean En Mel Iththanai Anbu
Athin Aalam purithnthukolla Idhayam Pothathu
Yean Yen Mel Iththanai Dhayvu Thaguthiyattra Ennai
Um Maganaai Searthathu

Inam Puriya Anbu Ithu
Inai Illa Inbam Ithu
Ithai Arinthean Ippoluthu
Inithagum Muppoluthu

Neerae En Parikaari Entru Naan Ariyamal
Naatkalai Tholaithean Um Anbai naan Unaramal
Thaamathippaillai Ini Naan meethi Vaalkkai umakkaga
Paavam seivathillai Ini Naan Paaduvean En Manathaara

Jeba
      Tamil Christians songs book
      Logo