Mayangidum Azhage Magimaiyin Sudarae song lyrics – மயங்கிடும் அழகே மகிமையின் சுடரே
Mayangidum Azhage Magimaiyin Sudarae song lyrics – மயங்கிடும் அழகே மகிமையின் சுடரே
மயங்கிடும் அழகே மகிமையின் சுடரே அம்மா
உம்மை வாழ்த்திப் போற்ற உள்ளமும் மகிழ்ந்திடுதே அன்னையே அன்னை வேளாங்கண்ணி தாயே
- அருள்நிறைப் பெற்று பலவும் தந்தாய்
அண்டி வந்தோரை அரவணைத்தாய்
வழங்கிடும் இதயத்தை நீ தந்தாய்
வானோர் போற்றிடும் வானவில் நீ
அழகே ஒளிர்ந்திடும் நிலவே வாழ்க நீ வாழ்கவே - வாடிடும் உள்ளத்தில் வலிமை தந்தாய்
தயங்கும் மனதில் துணிவு செய்தாய்
சுமைகளை சுகமாய் சுவைக்க சொன்னாய்
அருளால் நிறைத்து ஏற்றுக் கொண்டாய்
இருளே பயந்திடும் ஒளியே வாழ்க நீ வாழ்கவே
Mayangidum Azhage sung by Fr. Victor மாதா பாடல் மயங்கிடும் அழகே