Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும்
Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும்
மறவாதேயும் என்னையும்
உம்மைப்பற்றினேனே இயேசையா
1.யார் எனக்குண்டு இவ்வுலகில்
உம்மைத்தவிர யாருண்டு
நேசிப்பாருமில்லை தேற்றுவாருமில்லை
அணைப்பாருமில்லையே – மறவாதேயும்
2.பெற்றோர் மறந்தாலும் மற்றோர் வெறுத்தாலும்
உற்றோர் தள்ளினாலும் உலகம் பகைத்தாலும்
உன்னைவிட்டு விலகுவதில்லை கைவிடுவதில்லை
என்று சொல்லி நேசித்தீரே
3.நிந்தைக்குள்ளானாலும் நிம்மதி குலைந்தாலும்
ஆறுதல் குறைந்தாலும் அன்பு தணிந்தாலும்
வரைந்தேன் உள்ளங்கையில் உன்னை மறப்பது
என்று சொல்லி அணைத்தீரே