Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன்

Deal Score0
Deal Score0

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன்

மலையோரம் தேடினேன்
மாணிக்கத்தை தேடினேன்
கடலோரம் தேடினேன்
காணவில்லையே

நீர் நிறைந்த நதியோரம்
மல்லிகை வனத்தோரம்
மாடி மேடையிலும்
மன்னவர் மத்தியிலும்

தேடிப் பார்த்தேன் என் இயேசுவை
நுகரத் துடித்தேன் அவர் வாசனையை

எருசலேமே பரம எருசலேமே
என் மணவாளன் எழுந்திடுவாரே
கேருபீனே சேராபீனே செட்டைகள் அடித்து
வாழ்த்து சொல்லுங்களே

கேதுரு மரத்தை உடைக்கும் சத்தம் உடையவரை
பெண் மானையும் ஈன செய்பவரை

மலையோரம் தேடினேன்
மாணிக்கத்தை தேடினேன்
கடலோரம் தேடினேன்
காணவில்லையே

மேகங்களே தரித்திருங்கள்
சேனையாய் கர்த்தர் வந்திடுவாரே
கல்லறைகள் திறந்திடுமே
காரிருள் எல்லாம் விலகிப்போய்விடும்

கன்மலையும் நீரென்றால் பிளந்திடுமே
அவரை குத்தின கண்களும் கண்டிடுமே

மலையோரம் தேடினேன்
மாணிக்கத்தை தேடினேன்
கடலோரம் தேடினேன்
காணவில்லையே

நீர் நிறைந்த நதியோரம்
மல்லிகை வனத்தோரம்
மாடி மேடையிலும்
மன்னவர் மத்தியிலும்

தேடி பார்த்தேன் என் இயேசுவை
நுகர துடித்தேன் அவர் வாசனையை

மலையோரம் தேடினேன்
மாணிக்கத்தை தேடினேன்
கடலோரம் தேடினேன்
காணவில்லையே

Jeba
      Tamil Christians songs book
      Logo