Kulir thendral christmas song lyrics – குளிர் தென்றல் காற்றின்
Kulir thendral christmas song lyrics – குளிர் தென்றல் காற்றின்
குளிர் தென்றல் காற்றின் இசையிலே
மார்கழி பனியில் மரியன்னை மடியில்
இயேசு மானிடனாய் பிறந்தார்
தாலேலோ தாலேலோ கீதம் கேட்குதே
யூதேயாவின் பெத்லகேமே நீ சிறியதல்ல
இஸ்ரவேலை ஆள்பவர் உன்னில் தோன்றினார்
தீர்க்கன் உரையும் நிறைவேறியதே
விண்ணின் வெளிச்சம் நீரே
மண்ணின் மகிமையும் நீரே
உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்
விண்ணக தூதர்கள் தாலாட்டு பாடிட
ஞானியர்கள் காணிக்கைகள் படைத்தனர்
உன்னதத்தில் மகிமை உண்டானதே
வானத்தின் விளக்கும் நீரே
வாழ்வின் ஒளியும் நீரே
உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்