Kodi Arputharae St.Antony Song lyrics- அந்தோணியார் பாடல்

Deal Score0
Deal Score0

Kodi Arputharae St.Antony Song lyrics- அந்தோணியார் பாடல்

கோடி அற்புதரே
எங்கள் புனித அந்தோணியாரே

கோடி அற்புதங்கள் செய்த அந்தோணியாரை
நெனச்சி மெட்டுக்கட்டி கொண்டு வாறேன்-2
ரெட்டமாடு வண்டி பூட்டி மின்மினி
விளக்கொளியில் வண்டிப் பாட்டு பாடி வாறேன்-2

போதகரின் மகிமை அத்தனையும் அற்புதமே
சொல்வதெல்லாம் சத்தியமே
சுடுநீரில் விழுந்த குழந்தையை
காயமின்றி காப்பாற்றி விட்டாரே
மாடுரெண்டும் கொம்பசைக்க துள்ளித்துள்ளி
ஓடுதல்லோ தக்கிட தாளம் போடுதல்லோ-2

அந்தோணியார் புகழ பாடிப் பாடி
போகையில தூரம் வெகு தூரமில்ல -2

இருட்டக்கிழித்துச் செல்லும் சக்கரங்களுக்கோ
எந்த நேரத்திலும் பயமில்ல -2

தன்னன்னானே தனன்னன்னானே தன்னன்னானே தானேனானே…

தன்னன்னானே தானன்னே தன்னேன்னே னானைன்னா…
பாசமில்லா மகனை அழைத்து மனந்திரும்ப
வைத்தவரோ அம்மாவை அன்புடனே
காக்க சொன்தை பாருங்கம்மர
தன்னன்னானே தானன்னே தன்னேன்னே னானைன்னா…

கடவுளின் ஆற்றல்கள சொல்லி சொல்லி வந்த நாக்கு
அழியாப் புகழுடனே புதுமையாக இருக்குதம்மா
மன்னனிடம் பணியாத மிருகங்களே மெல்லவந்து
நமது அந்தோணியார் காலில் மண்டியிட்டதம்மா
தன்னன்னானே தானன்னே தன்னேன்னே னானைன்னா…

பாடிவரும் கச்சாங்காத்து ஈரமாக வீசுதல்லேர
அதுசொல்லும் வீரமான பேடு என்ன சொல்லு மாமர
இது என்ன கஷ்டம் புள்ள சொல்லிதாறேன்
கேளுபுள்ள ஈரமான மனசுடைய அந்தோணியார் – தானே புள்ள

நீலக்கடல் ஓரத்திலே நிமிர்ந்து நிக்கும் நம்ம சனம்
வீசுகிற வலையும் கூட அந்தோணியார் பெயரச் சொல்லும்

உப்பும் மிளகும் வச்சி அந்தோணியார் பாதம் தொட்டு
முத்தமொன்று வைக்கையிலே -2
சம்பா அரிசி சோறு பொங்குவது பொலே
அந்த பாதம் மணம் வீசிடுதே -2

அவர் சொன்ன அடுவூரை அக்கானிய போல
நல்ல மதிரமாய் வீசுதல்லோ-2
அந்த போதனையில் இயேசய்யாவின் பாசமுகம்
வெட்டிவேரு வாசம் ’ போலே வீசுதல்லோ-2
தன்னன்னானே தானன்னே தன்னேன்னே னானைன்னா…

Happy Saint Antony Feast Day
தலைசிறந்த போதகரே
நாவு அழியா நன்மகனே
கோடி அற்புதரே உம்மை வாழ்த்திப் பாடுகிறோம்

    Jeba
        Tamil Christians songs book
        Logo