Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும்
Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும்
கண்ணின் மணிபோல் காத்திடும் இயேசு என்னுடன் இருக்க கவலையில்லை கேட்பதையெல்லாம் கொடுத்திடும் இயேசு நல்லதை எதையும் மறுப்பாரோ நீ கலங்காதே மனமே உன்னை கைவிடவே மாட்டார் – நீ
கலங்காதே மனமே உன்னை கைவிடவே மாட்டார்
இன்பத்திலும் துன்பத்திலும் போற்றி புகழ்ந்திடு மனமே
இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தி வணங்கிடு மனமே
பெற்றவர் நேசிக்க மறந்தாலும் என்னை மறவாத தெய்வம் இயேசு
குற்றங்கள் பல நான் செய்திருந்தும் என்னை மன்னித்து அணைப்பவர் இயேசு
ஏனெனில் அவரே என் ஆயர் என் புகலிடம் அரனும் அவராவர்
சோர்ந்திடாதே மனமே உன் சுமைகளை தாங்கிடுவார்
மகிழ்ந்திடுவாய் மனமே உன்னை மறந்திடவே மாட்டார்
பாதையில் காரிருள் சூழ்ந்தபோது தம் பேழையில் எனைவைத்து காத்தார்
தீயவர் சொல்லில் தகர்ந்தபோது தம் தோளில் தூக்கிச் சென்றார்
ஏனெனில் அவரே என் விளக்கு என் ஒளியும் வழியும் அவர் தாமே
சோர்ந்திடாதே மனமே உன் சுமைகளைத் தாங்கிடுவார்
மகிழ்ந்திடுவாய் மனமே உன்னை மறந்திடவே மாட்டார்
Kanninmanipol Kaathidum Yesu tamil Christian Devotional Song lyrics