kalangum ullamae song lyrics – கலங்கும் உள்ளமே
kalangum ullamae song lyrics – கலங்கும் உள்ளமே
கலங்கும் உள்ளமே – நீ
இயேசுவை நோக்கியே பார்
கலக்கங்கள் யாவையும் நீக்கி
இளைப்பாறுதல் தந்திடுவார்
1.வாழ்க்கையில் பலவித போராட்டங்கள் வரும்
சோர்ந்து போகாதே
மனதினில் பலவித குழப்பங்கள் நேரிடும்
மனமும் தளர்ந்திடாதே
வெற்றி நிச்சயம் – இது
இயேசுவின் சத்தியம்
2.குடும்பத்தில் சில சில சிக்கல்கள் வந்தாலும்
பயந்து போகாதே
சூழ்நிலை யாவும் எதிராக வந்தாலும்
கலங்கித் தவிக்காதே
வெற்றி நிச்சயம் – இது
இயேசுவின் சத்தியம்
3.சோதனை வேதனை சேர்ந்தே வந்தாலும்
தளர்ந்து போகாதே
போதனையால் உன்னை தேற்றிடும் இயேசுவை
மறந்து போகாதே
வெற்றி நிச்சயம் – இது
இயேசுவின் சத்தியம்
4.கஷ்டமும் நஷ்டமும் மாறி மாறி வந்தாலும்
கலங்கித் தவிக்காதே
ஒளி வரும் நேரம் இருளாக தெரிந்தாலும்
ஓடி ஒளிந்திடாதே
வெற்றி நிச்சயம் – இது
இயேசுவின் சத்தியம்