Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும்
Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும்
காத்திட்டார் இரவும் பகலும்
காத்திடுவார் இனிமேலும் -2
அவரே கர்த்தர் ஒருவரே காப்பவர் (2)
இரவும் அவரே பகலும் அவரே
ஆதி அவரே அந்தம் அவரே
அவரே கர்த்தர் ஒருவரே காப்பவர் (2)
1.மீனின் வயிற்றில் யோனாவோ
துயரத்தில் மூன்று நாள் தானோ
துளியும் துன்பம் நெருங்காதே
காக்கும் தூயவர் அவர் தானே -2
2.நாற்பது நாட்கள் பெரு மழையோ
பூமியே முற்றிலும் அழிந்தாலும்
நோவாவின் குடும்பம் பத்திரமாய்
அற்புதர் இரட்சகர் காத்தாரே
3.எரியும் அக்கினி சூளை தானோ
சூளையின் நடுவில் மூவர் தானோ
தலை மயிர் கூட கருகாமல்
கண்ணின் மணிபோல் காத்தாரே