Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே

Deal Score0
Deal Score0

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே

இஸ்ரவேலே என் ஜனமே
நான் உன் நினைவாய் உள்ளேன்
நான் உன்னை மறப்பதில்லை
உன்னை சிருஷ்டித்து அழைத்தவர் நானே
உன்னை திருப்தியாய் நடத்திடுவேனே

1.காலங்கள் மாறினும்
என் வார்த்தை மாறாதே
காய்ந்ததை கனிநிலமாய்
என் வல்லமை மாற்றிடுமே
என் வலகரம் உன்னை தாங்கிடுமே
புது அதிசயம் உன்னில் வெளிப்படுமே

2.பூர்வமான தோல்விகள்
நினைத்து புலம்பாதே
பூத்திடும் புதுவாழ்வு
இன்றே துவங்குகிறேன்
நீ அறிந்திடா நினைத்திடா அதிசயங்கள்
உன் வாழ்வின் அலங்காரமாகிடுமே

3.என் நிமித்தம் உன் குறைவை
நினைக்க மறுக்கின்றேன்
மீட்டெடுத்து மகிமை தந்து
மகனாய் மதிக்கின்றேன்
நீ இனியென்றும் வெட்கம் அடைவதில்லை
பலர் வியந்திட வெற்றி அடைந்திடுவாய்

Jeba
      Tamil Christians songs book
      Logo