Iraiva en Idhayam Tharukintrean song lyrics – இறைவா என் இதயம் தருகின்றேன்
Iraiva en Idhayam Tharukintrean song lyrics – இறைவா என் இதயம் தருகின்றேன்
இறைவா என் இதயம் தருகின்றேன்
காணிக்கையாய் என்னை மாற்றுவாய்
உடல் உயிர் அனைத்தும் உனதாய் மாற
என்னையே நானும் அர்ப்பணிக்கின்றேன்
- படைப்பனைத்தும் எனக்கு தந்தாய்
பாரினில் வாழ எனை அழைத்தாய்
பணிவுடன் வாழ எனை அழைத்தாய்
புவிதனில் பணி செய்ய எனை அழைத்தாய்
வருகின்றேன் தருகின்றேன்
காணிக்கையாய் எனை ஏற்பாய் - வளமனைத்தும் எனக்கு தந்தாய்
வாழ்வினில் உயரவே எனை பணித்தாய்
வறியவர் மகிழவே எனை படைத்தாய்
படைப்பினை பகிரவே எனை அழைத்தாய்
வருகின்றேன் தருகின்றேன்
காணிக்கையாய் எனை ஏற்பாய்
Iraiva en Idhayam sung by Fr.Victor காணிக்கைப் பாடல் இறைவா என் இதயம் தருகின்றேன்