Inbam Pongum Enthan Nenjil song lyrics – இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில்

Deal Score0
Deal Score0

Inbam Pongum Enthan Nenjil song lyrics – இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில்

இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில்
இறைமகன் வந்திடும் நேரம்
இனிமை தங்கும் எந்தன் உள்ளம்
இனி எனக்கில்லை பாரம்

இயேசுவே என் தேவனே
இயேசுவே என் ராஜனே (2)
இனி வாழ்வது நானல்ல
நீயே என்னில் வாழ்கிறாய்
இயேசுவே நேசரே

கரையைத் தேடும் ஓடம் போல்
உன்னைத் தேடி வந்தேனே
கலங்கரை தீபமாய்
பாதை காட்டிச் சென்றாயே (2)
என்னோடு தங்கும் என்று
வரம் வேண்டி நின்றேனே (2)
உன்னோடு நான் இருப்பேன்
கவலை இல்லை என்றாயே (2) (இயேசுவே என் தேவனே..)

வாழ்வு தரும் உணவென்று
உரைத்த அன்பு தெய்வம் நீ
வாழ்விக்கும் வார்த்தைகளால்
வழிநடத்தும் தலைவன் நீ (2)
என் பின்னே வாவென்று
அழைக்கின்ற ஆயன் நீ (2)
உன் பிள்ளை போல் என்னை
காக்கின்ற நேயன் நீ (2) (இயேசுவே என் தேவனே..)

இன்பம் பொங்கும் Inbam Pongum Holy Communion Song திருவிருந்து பாடல்

Jeba
      Tamil Christians songs book
      Logo