Inba Yesuvin Inaiyilla – இன்ப இயேசுவின் இணையில்லா

Deal Score+1
Deal Score+1

Inba Yesuvin Inaiyilla – இன்ப இயேசுவின் இணையில்லா

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

  1. நித்தியமான பர்வதமே
    உந்தனில் நிலைத்திருப்பேன்
    நீங்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
    நித்தம் நடத்துகிறீர் – என்னையும்
    உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
    உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்
  2. பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
    ஆழ்ந்து நான் மாள்கையிலே
    பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
    பட்சமாய் பிரித்தெடுத்தீர்
    பாரில் பரிசுத்தராகுதற்காய்
    மிக பரலோக நன்மைகளால் நிறைத்தீர்
  3. மானானது நீரோடைகளை
    வாஞ்சித்துக் கதறுமாப் போல்
    என் ஆத்துமா உம்பொன் முகம் காணவே
    வாஞ்சித்து கதறிடுதே
    வானிலும் இந்த பூமிலும் நீர்
    என் வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே
  4. ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
    அன்பரை உளம் கனிந்தே
    அளவில்லாத ஜீவனை அளித்தே
    அற்புத ஜெயம் ஈந்தீரே
    அல்லேலூயா துதி கன மகிமை – உம்
    நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்

Inba Yesuvin Inaiyilla song lyrics in English

Inba Yesuvin Inaiyilla
Naamaththai pugalnthu
Egamathil Paadida Tharunamithae
Yesuvai poal oru neasarillai
intrum entrentum Avar
Thuthi saattriduvean

1.Niththiyamana parvathamae
Unthanil nilaithiruppean
neengidathennai thozhin mael sumanthae
niththam nadathukireer ennaiyum
um janamaai ninaithae eentheer
unnatha velippaduthal niraivaai

2.Paavaththil veelnthu maayaiyilae
aalinthu naan maalkaiyilae
pirinthu deva anbinai kaattiyae
patchamaai pirithedutheer
Paaril parisuththarakutharkaai
Miga paraloga nanmaikalaal niraitheer

3.Mananathu neerodaigalai
vaanjithu katharumaappoal
en aathuma um pon mugam kaanvae
vaanjithu kathariduthae
vaanilum Intha boomilum Neer
en vaanjaikal theerppavaraai ninaithae

4.Aarparippodae sthoththarippom
Anbarai ulam kanitnhae
Alavillatha jeevanai alithae
Arputha jeyam eentheerae
Alelluya Thuthi Gana Magimai um
Namaththirkae Nitham Sattriduvom

Inba Yesuvin Inaiyilla lyrics, Inba yesuvin lyrics, Inba yesuvin inai illa lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo