Inaiyilla Namam Yesuvin Namam song lyrics – இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்

Deal Score0
Deal Score0

Inaiyilla Namam Yesuvin Namam song lyrics – இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்

இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்
இன்பமே தங்கும் இதயமே பொங்கும்
இன்னல்கள் தீரும் என் மனம் மாறும்

  1. பாவத்தின் கூரை முறித்திடும் நாமம்
    பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம்
    சாபப் பிசாசை ஜெயித்தவர் நாமம்
    சந்ததம் ஓங்கிடும் நாமம் – பல
    நோய் பிணி தீர்க்கும் ஒளஷதம் அதுவே
    பக்தர்கள் அடைக்கல நாமம்
  2. லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்
    லோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்
    ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்
    ஜீவனோடெழுந்தவர் நாமம் – அதை
    யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே
    அணைந்திடா ஒளி திரு நாமம்
  3. அண்டிடுவோரை அணைத்திடும் நாமம்
    அன்பின் சொரூபி இயேசுவின் நாமம்
    வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்
    வேதனை தாங்கிடும் நாமம் – இதை
    நம்பியே வாரும் பாவங்கள் தீரும்
    இன்றும்மை அழைத்திடும் நாமம்
  4. அழியாமை ஜீவன் அளித்திடும் நாமம்
    அற்புதம் செய்யும் இயேசுவின் நாமம்
    விண்ணுலகோர் நம்பும் நாமம்
    மண்ணுலகோர் நம்பும் நாமம் – மிக
    சீக்கிரம் வருவேன் என்று வாக்குரைத்த
    மீட்பர் நல் மேய்ப்பரின் நாமம்

Inaiyilla Namam Yesuvin Namam song lyrics in english

Inaiyilla Namam Yesuvin Namam
Inbamae Thangum Idhayame Pongum
Illangal Theerum En Manam Maarum

1.Paavaththin Koorai Murithidum Namam
Paadugal Yeattra Yesuvin Namam
Saba pisasai Jeyithavar Namam
Santhatham Oongidum Namam
Pala Noai Pini Theerkkum Owshatham Athuvae
Bakthargal Adaikkala Namam

2.Logaththin Aasai Veruthidum Namam
Logaththai Meetkkum Yesuvin Namam
Jeevanai Kodutha Ratchkar Namam
Jeevanodelunthar Namam
Athai Yaar Maraithiduvaar
Manukula Villakae Anainthida Ozhi Thiru Namam

3.Andiduvorai Anaithidum Namam
Anbin Sorubi Yesuvin Namam
Venduthal Keatkum Vallavar Namam
Vedhanai Thaangidum Namam Ithai
Nambiyae Vaarum Paavangal theerum
Intrummai Alithidum Namam

4.Azhiyamai Jeevan Alithidum Namam
Arputham Seiyum Yesuvin Namam
Villulakoar Nambum Namam
Mannulakoar Nambum Namam
Miga seekkiram Varuvean entru
Vakkuraitha Meetpar Nal Meipparin Namam

Sis. சாராள் நவரோஜி
R-16 Beat T-90 Dm 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo