EPHPHATHA – ஊற்று தண்ணீரே

Deal Score0
Deal Score0

EPHPHATHA – ஊற்று தண்ணீரே

ஊற்று தண்ணீரே
எங்கள் ஊற்று தண்ணீரே
உளையான சேற்றில் இருந்து தூக்கினீரே
கன்மலையே எங்கள் கன்மலையே
கரம்பிடித்து இதுவரை நடத்தினீரே

மரித்த காரியம் மறுபடி துவங்கும்
முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும்

1.எப்பத்தா என்று சொன்னாரே
எதையும் செய்திடுவாரே
கல்லறை முன் அவர் இருக்க
மரணமும் தலை குனியும்

2.வியாதியின் விளக்கங்கள் வேண்டாம்
மருத்துவ அறிக்கைகள் வேண்டாம்
வஸ்திரத்தி்ன் ஓரம் தொட்டு
வல்லமை அடைந்திடுவேன்

3.இழந்து நீ அழுதது போதும்
இருதய கடினங்கள் மாறும்
உயிரிழந்த எலும்புகளும்
அவர் வார்த்தையால்
உயிரடையும்

Jeba
      Tamil Christians songs book
      Logo