என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru
என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru
என்னையும் (2)
ஒரு பொருட்டென்று எண்ணி
இம்மட்டும் கொண்டு வந்ததற்கு
எம்மாத்திரம், நான் எம்மாத்திரம்
என் வீடும் எம்மாத்திரம்.
1.உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை;
உம்மையன்றி வேறே தேவர்கள் இல்லை.
நானும் என் வீட்டாரும்
உம்மையே சேவிப்போம்
நானும் என் குடும்பத்தாரும்
உமக்கே சாட்சிகள்.
2.கழுகு தன் குஞ்சுகளைக் காப்பது போல
காலமெல்லாம் எம்மை நீர் காத்தீர் ஐயா
மலைகள் பள்ளத்தாக்கிலும்
அலைகள் ஆழிகளிலும்
ஆதரித்து அமிழந்திடாமல்
அரவணைத்தீரே.
3.நொந்த நாளிலே நாடி நன்மை செய்தீரே
பந்தபாசம் விலகிச் சென்றும் உடனிருந்தீரே
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்
வழி நடத்த என் வழிக்கு
அரணாய் இருக்கிறீர்.
Ennaiyum Oru poruttentru song lyrics in english
Ennaiyum (2)
Oru poruttentru Enni
Immattum kondu vanthatharkku
Emmathiram naan emmathiram
en veedum emmathiram
1.Umakku nigaranavar oruvarum illai
ummaiyantri veare devargal illai
naanum en veettarum
ummaiyae seavippom
naanum en kudumpatharum
umakkae saatchikal
2.Kazhugu than kunjukalai kaapathu pola
kaalamellaam emmai neer kaatheer aiya
malaigal pallathakkilum
alaigal aazhikalilum
aatharithu amilnthitidamal
aravanaitheerae
3.Nontha naalilae naadi nanmai seitheerae
pantha paasam vilagi sentrum udaniruntheerae
megasthambum akkinisathambamum
Vazhi nadatha en vazhikku
aranaai irukkireer.