Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும்
Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும்
என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை
Stanza 1 – Proclamation from Psalm
உன்னதரின் மறைவில்
வல்லவரின் நிழலில்
நிலைத்து நிற்கும் கொடி நான்
கனி கொடுப்பேன் நிதம் நான்
(என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்) -2
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்
என்னை சூழ்ந்து நிற்பதும் கிருபை
விட்டு விலகாமல் சுமப்பதும் கிருபை
Stanza 2 – Prayer of Submission
குயவனே களிமண் நான்
விருப்பம்போல் வனைந்திடுமே
கரங்களில் பாத்திரமாய்
பயன்படுத்தும் உமக்காய்
(உருவாக்கினீர் உருமாற்றினீர்
உமதாக்கி சேர்த்துக்கொண்டீர்) – 2 உமதாக்கி சேர்த்துக்கொண்டீர்
என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
Stanza 3 – Promise with Thanksgiving
இதயமெல்லாம் நன்றியால்
நிரம்பிடுதே நன்மையால்
பாடிடுவேன் கவியால்
போற்றிடுவேன் துதியால்
(மேகம் மீதினில் வேகமாய் வரும்
என் மீட்பர் உம்மைக் காணுவேன்/சேருவேன்) – 2
என் மீட்பர் உம்மை சேருவேன்
என்னை சூழ்ந்து நிற்பதும் கிருபை
விட்டு விலகாமல் சுமப்பதும் கிருபை
பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை