Engengum Kangiren un mugam song lyrics – எங்கெங்கும் காண்கிறேன் உன் முகம்
Engengum Kangiren un mugam song lyrics – எங்கெங்கும் காண்கிறேன் உன் முகம்
ஆதிநாளிலே வெறுமையாவிலும் அசைவாடிய தெய்வமே
ஜோதியாகியே யாவுமாகவே உருவானது இறைவனே
எங்கெங்கும் காண்கிறேன் உன் முகம்
எங்கெங்கும் காண்கிறேன் உன் முகம்- இறைவா
எந்தெந்த அழகிலும் உன் மனம்
இயற்கை வளங்கள் எல்லாம் உன் தானம்-2
அது அசையும் ஓசை எல்லாம் உன் நாமம் – எங்கெங்கும்
ஒளியாகி இருள் போக்கி உனதாக்கி வைத்தாய்
நீராகி நிலமாகி உயிர் வாழ செய்தாய்-2
துளிராகும் விதையிலும் துளியாகும் மழையிலும்
நிறைந்திருப்பது உன் வடிவாகும் -2
உருவிலா பெருங்காற்றில் ஓடாக கலந்து
உயிர் மூச்சாவதும் நீயாகும் – எங்கெங்கும்
நிழலாகி மணமாகி வாழ்வாகி நிறைந்தாய்
திசையாகி சிறகாகி இயக்கமானாய் -2
நிறைவாகும் விளைவிலே பணிவாகும் பயிரிலே
பாடங்களே மறை பொருளாகும் -2
விழுகின்ற அருவியின் எழுந்திடும் துணிவாய்
உணர்கின்ற மனமே நீயானாய் – எங்கெங்கும்
ஆழ்நிலம் நோக்கும் நீரினை போல
தாகம் கொண்டோரில் நீ நிறைகின்றாய்
ஆழ்கடல் நீந்தும் மீனினை போல
வாழ்நிலை கடக்க துடுப்பாகின்றாய்
நன்றென கண்ட படைப்புகள் யாவும் ஆ..ஆ..ஆ
நின்றது போலே இருந்திட செய்வாய்
நொடி பொழுதில் தன் விரலெடுத்து
கருவிழி மோத விடுவோமா
Engengum kaankirean un mugam sung by S.P. Balasubhramanyam Bharatanatyam Song