Enakaaga Adikkapateere – எனக்காக அடிக்கப்பட்டீரே

Deal Score0
Deal Score0

Enakaaga Adikkapateere – எனக்காக அடிக்கப்பட்டீரே

பல்லவி

எனக்காக அடிக்கப்பட்டீரே
எனக்காக தண்டிக்கப்பட்டீரே
இயேசுவே எனக்காக அடிக்கப்பட்டீரே
எனக்காக தண்டிக்கப்பட்டீரே

அனுபல்லவி

நீர் அசட்டை பண்ணப்பட்டீர்
நீர் புறக்கணிக்கப்பட்டீர்
துக்கம் நிறைந்தவராய்
பாடு அனுபவித்தீரே

சரணங்கள்

1.என் மீறுதலால் நீர் காயப்பட்டீரே
என் அக்கிரமத்தால் நீர் நொறுக்கப்பட்டீரே
சமாதானத்தை நீர் எனக்குத் தந்தீர்
தழும்புகளால் நான் சுகமானேன்

2.ஒரு ஆட்டைப்போல்
நீர் மவுனமானீரே
உம்மை அடிக்கையில்
நீர் வாய் திறக்கலையே
அழகுமில்லை சவுந்தர்யமில்லை
மனுஷர் விரும்பத்தக்க ரூபம் உமக்கில்லை

3.உம் ஆத்துமாவை
மரணத்தில் ஊற்றிவிட்டீரே
அநேகர் பாவங்களை நீர் சுமந்து கொண்டீரே
வரப்போகின்ற உம் சந்ததிக்காகவே
பிதாவின் சித்தத்தை நீர் செய்து முடித்தீரே

Enakaaga Adikkapateere Song Lyrics in English

Enakaaga Adikkapateere
Enakkaga Thandikkapatteerae
Enakaaga Adikkapateere
Enakkaga Thandikkapatteerae

Neer Asattai Pannapatteer
Neer Purakkanikkapatteer
Thukkam Nirainthavaraai
Paadu Anubaviththeerae

1.En Meeruthalaal Neer Kaayapatteerae
En Akkiramaththaal Neer Norukkapatteerae
Samathanaththai neer Enakku Thantheer
Thazhumbukalaal Naan Sugamanean

2.Oru Aattaipol
Neer Mavunamaaneerae
Ummai Adikkaiyil
Neer Vaai Thirakkalaiyae
Alagumillai Sowndaryamillai
Manushar Virumbathakka Roobam Umakkaillai

3.Um Aathumavai
Maranththil Oottrivitteerae
Anegar Paavangalai neer Sumanthu Kondeerae
Varapokintra Um Santhathikkagavae
Pithavin Sithathai Neer Seithu Muditheerae

Enakaaga Adikkapateere Lyrics as shown above Tamil Christian Song as well as Sung By Usha Gopi and Lyrics Tune by Sis.Grace Mary Stephen In Association with Living god Jesus Ministry.

godsmedias
      Tamil Christians songs book
      Logo