En Vazhu Unakaagaththaanae song lyrics – என் வாழ்வு உனக்காகத்தானே
En Vazhu Unakaagaththaanae song lyrics – என் வாழ்வு உனக்காகத்தானே
என் வாழ்வு உனக்காக தானே – இதனை
மறந்து விட்டால் எல்லாம் வீணே
என் உள்ளம் உனக்கான இல்லமே – வேறு
யாராலும் நிறைவங்கு இல்லையே
பிறந்ததும் இங்கு வளர்ந்ததும் இன்று
வாழ்வது எல்லாம் உனக்காக
எனக்காக மட்டும் வாழ்ந்தால் அந்த
நாள் எல்லாம் எதற்காக?
காடு மலை தாண்டினாலும்
கடலை நதி மறக்குமா?
தேடி எங்கும் ஓடினாலும்
வீடு மறந்து போகுமா?
வாழ்க்கை ஒரு பயணம் என்று ஏன் மறந்து போகிறேன்?
பயணத்திற்கு தேவையில்லா சுமைகள் தேடிச்சோர்கிறேன்?
என் தெய்வமே என் இயேசுவே
உனக்காக நான் வாழும் வரம் வேண்டுமே வரம் வேண்டுமே…
சாலையோர சோலைகளெல்லாம்
பாலும் மனதை இழுக்குதே
போலிகளும் பொய்முகம் காட்டி
வா வாவென அழைக்குதே
மாலை வரும் வேளை முன்பு மனதில் தீபம் ஏற்றுவாய்
நாளும் பொழுதும் உமக்காய் வாழும் ஞானம் தந்து மாற்றுவாய்
என் தெய்வமே என் இயேசுவே
உனக்காக நான் வாழும் வரம் வேண்டுமே வரம் வேண்டுமே
Yen Vazhvu Unakaagaththaanei Tamil Mass Hymns , En Vaalvu unakkagathanae