என் இதயம் நீர் தங்கும் – En idhayam Neer thangum
என் இதயம் நீர் தங்கும் ஸ்தலமாக வேண்டும்
உம் வார்த்தைகள் பதிக்கும் இடமாக வேண்டும் -2
உம்மை நேசிக்கிறேன் -4
என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்
முழு மனதோடு உம்மை நேசிக்கிறேன் -2 – என் இதயம்
என் இதய பலகையிலே
உம் சித்தம் எழுதனுமே
உமது வார்த்தையிலே
உம் சித்தம் விளங்கிடுதே
என் இதய பலகையில்
உம் சித்தம் எழுதனுமே
உமது பிரமாணத்திலே
சித்தம் விளங்கிடுதே
என் இதயம் முழுதும் என்றும் உமக்காய்
உடன்படிக்கை செய்தேன் – என் இதயம்
கல்லான சிலைகளுக்குள்
நீர் என்றும் இருப்பதில்லை
கல்லான இதயத்திலே
நீர் என்றும் இருப்பதில்லை
கல்லான என் இதயம் சதையாக
மாற்றினீர் மகிமையின் ஸ்தலமானதே
மகிமையின் ஸ்தலமானதே
En idhayam Neer thangum song lyrics in English
En idhayam Neer thangum sthalamaga vendum
Um Vaarthaigal pathikkum Idamaga vendum -2
Ummai nesikkirean -4
En Uyirinum Melaai nesikkirean
Mulu Manathodu Ummai neasikkirean -2 – En Ithayam
En Idhya palagiyilae
Um Siththam eluthaname
Umathu Vaarthaiyile
Um Siththam vilangiduthae
En Idhya palagiyilae
Um Siththam eluthaname
Umathu piramanathilae
Siththam vilangiduthae
En idhayam muluthum entrum umakkaai
Udanapdikkai Seithean – En idhyam
Kallana Silaikalukkul
Neer entrum iruppathillai
Kallana idhayathiilae
Neer entrum Iruppathillai
Kallana en idhaum sathaiyaga
maattrineer magimaiyin sthalamnathae
Magimaiyil sthalamanathae
உம் வசனங்கள் எல்லாம் எனதாக வேண்டும்
என் இதயம் முழுதும் உமதாக வேண்டும் -2
உம்மை நேசிக்கிறேன் -4
என் உயிரினும்மேலாய் நேசிக்கிறேன்
முழு மனதோடு உம்மை நேசிக்கிறேன் -2 – என் இதயம்
கர்த்தாவே உமக்கு நன்றி உம்முடைய வசனங்கள்
எங்களுடைய இருதயத்தில் மட்டுமல்ல இந்த
பாடலை கேட்கிற ஒவ்வொருவருடைய
இருதயத்திலும் எழுதப்படட்டும். உம்முடைய
வசனத்தின் மீது ஒரு அன்பு உண்டாகட்டும்.
உம்முடைய வசனத்தினால் இந்த பாடலை கேட்கிற
ஒவ்வொரு பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் ஒரு
மாறுதல் உண்டாகும்படியாய் எல்லா
நாமத்திலும் மேலான நாமத்தை உடைய இயேசுவின்
நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம் எங்கள் நல்ல
பிதாவே ஆமென்
அன்புள்ள இயேசப்பா இந்த பாடல நாங்க
பாடினதை போல உம்மை நாங்கள் நேசிக்கவும்
உம்முடைய வசனங்களை எங்களுடைய இருதயத்தில்
வைத்து அதன்படி நடப்பதன் மூலம் உம்மை
அதிகமாய் நேசிக்கணும் இந்த பாடலை கேட்கிற
ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதித்து உம்மை
இன்னும் அதிகமாய் நேசிக்கிற பலனையும்
கிருபையும் கொடுங்க என்று சொல்லி
ஜெபிக்கிறோம் இயேசுவே நீர் மாத்திரம்
மகிமைப்படுவீராக ஆமென்