En Aanma Iraiva Ummidam Adaikkalam song lyrics – என் ஆன்மா இறைவா உம்மிடம்
En Aanma Iraiva Ummidam Adaikkalam song lyrics – என் ஆன்மா இறைவா உம்மிடம்
என் ஆன்மா இறைவா உம்மிடம் அடைக்கலம்
நீரே எந்தன் படைக்கலம்
ஒடுக்கப்பட்டோம் நொறுக்கப்பட்டோம்
உம்மை நம்பி சரணடைந்தோம்
உம்மை நோக்கி கூவுகின்றேன் இறைவா
என் குரல் கேட்டருளும்
நன்மை அறியா வஞ்சகரால் நான் நலமிழந்தேன்
என் பொருள் இழந்தேன்
உம் சிறகுகள் நிழலில் குடியிருக்க
இறைவா எனக்கு இரங்குமையா
சிங்கம் போன்ற மனிதர்களால்
சீறிப் பாய்ந்திடும் குண்டுகளால்
பங்கம் புரியும் பகைவர்களால்
வாழ்வை இழந்து தவிக்கின்றேன்
உம் சிறகுகள் நிழலில் குடியிருக்க
இறைவா எனக்கு இரங்குமையா
இறைவா உந்தன் பேரிரக்கம்
வானகமளவு உயர்ந்ததன்றோ
உந்தன் சொல்லின் உறுதியினை
நான் நம்பியே இன்னும் இருக்கின்றேன்
உம் சிறகுகள் நிழலில் குடியிருக்க
இறைவா எனக்கு இரங்குமய்யா