En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே
En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே
என் ஆண்டவரே என் ராஜாவே
என் இயேசுவே நீர் ஆளுகை செய்கிறீர்
நீர் ஆளுகை செய்கிறீர் (3) – Neer Aalugai Seigireer
என் இயேசு ராஜனே
Stanza 1:
ஆதியாகமம் 1: 2-3
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர்ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம்உண்டாயிற்று.
ஒழுங்கின்மையின் மத்தியில்
வெறுமையின் சூழலில்
இருள் சூழ்ந்தக் காலத்தில்
நீர் ஆளுகை செய்தீரே
வார்த்தையை அனுப்பி
வெளிச்சதை உண்டாகசெய்தீரே
நீர் ஆளுகை செய்கிறீர் (3)
என் இயேசு ராஜனே
Stanza 2:
ஆதியாகமம் அதிகாரம் 37 – 41:44 (Life of Joseph)
அன்பாய் வந்தவனை
கொலை செய்ய நினைத்து
குழியில் தள்ளினபோதிலும்
நீர் ஆளுகை செய்தீரே
அடிமையை அதிகாரியாய்
உயர்த்தி வைத்தீரே
நீர் ஆளுகை செய்கிறீர் (3)
என் இயேசு ராஜனே
Stanza 3:
லூக்கா 23: 35 – 37
ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன்மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால்தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானேஇரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக்காடியைக் கொடுத்து
நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்றுஅவரைப் பரியாசம்பண்னினார்கள்.
மாற்கு 16:6; லூக்கா 24:6; மத்தேயு 28:6
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில்அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
சிலுவையில் தொங்கினீர்
அதிகாரிகள் இகழ்ந்தனர்
சேவகர் பரியாசம் பண்ணினர்
நீர் உயிரோடு எழுந்தீரே
இப்பொழுதும் எப்பொழுதும்
நீர் ஆளுகை செய்கிறீர்
நீர் ஆளுகை செய்கிறீர் (3)
என் இயேசு ராஜனே
என் ஆண்டவரே
என் ராஜாவே
என் இயேசுவே
நீர் ஆளுகை செய்கிறீர் – 2
நீர் ஆளுகை செய்கிறீர் (3)
என் இயேசு ராஜனே