Ellam Enaku Ellam Enaku Neengathanaiya song lyrics – எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க
Ellam Enaku Ellam Enaku Neengathanaiya song lyrics – எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க
எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க தானையா
உயர்விலும் தாழ்விலும் உறவிலும் பிரிவிலும்
எல்லாம் எனக்கு இயேசு தானையா
அனுபல்லவி
இயேசையா இயேசையா எந்நாளும் நீங்கதானையா
இயேசையா இயேசையா எப்பொழுதும் நீங்கதானய்யா இயேசையா இயேசையா என் வாழ்வில் நீங்க போதுமே
பல்லவிகள்
1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே
இறுதிவரை என்னை கரம் பிடித்து
கரைசேர்க்கும் அன்பின் தகப்பன் நீரே
2.உலகோர் என்னை பகைத்தாலும்
உற்றார் என்னை வெறுத்தாலும்
உம் அன்பின் கயிறால் கட்டி என்னை
பாதுகாக்கும் என் பரமன் நீரே
3.உம்மிலே பெலன் கொள்ளும் மனுஷரெல்லாம்
இருதயத்தில் செவ்வையான வழிகளோடு
அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து
நீரூற்றாக அதை மாற்றிக்கொள்வார்கள்