அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics

Deal Score0
Deal Score0

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics

ஆரீராரிரோ!.. ஆரீராரிரோ!… (2)
அன்பின் உருவாய் வந்தவனே
தாலாட்டு நான் பாடுவேன்!..
விண்மீதுலா வந்த வெண்மதியே
மண்மீது தவழ்ந்த விண்மலர் பொன்மலர்
கண்ணே கண்மணியே தூங்கு

மரியின் மடியிலே மன்னா நீயுறங்கு!
செவ்விதழ் செண்பகமே, சீராய்த் தானுறங்கு!

1.விண்ணகந் துறந்து, மண்ணகம் பிறந்து
என்னகம் வந்ததேனோ?
கந்தையில் பொதிந்து விந்தைகள் புரிந்து
நிந்தைகள் ஏற்றதேனோ?
ஏனிந்த நேசமோ?- என் கைம்மாறு செய்குவேன்?

தூங்கு செல்வமே, என்னாசை அமுதமே!
தூங்கு செல்வமே, என்னழகு செல்லமே!

2.யுத்தத்தின் சத்தங்கள் தரும் விசாரங்கள்
நித்தமும் பெருகுதே
வருகை நெருங்கும் காலத்திலே – விசு வாசமும் குறையுதே
நீரன்றி உலகிலே யாருண்டு பாரிலே?

இரங்கும் தெய்வமே, பரிந்து பேசுமே!
கருணையின் கடலே, கண்கொண்டு பாருமே!

அன்பின் உருவாய் வந்தவனே
தாலாட்டு நான் பாடுவேன்!..
விண்மீதுலா வந்த வெண்மதியே
மண்மீது தவழ்ந்த விண்மலர் பொன்மலர்
கண்ணே கண்மணியே தூங்கு

மரியின் மடியிலே மன்னா நீயுறங்கு!
செவ்விதழ் செண்பகமே, சீராய்த் தானுறங்கு! – 2

 

    Jeba
        Tamil Christians songs book
        Logo