Alayum Maname Amaithi Amaithi song lyrics – அலையும் மனமே அமைதி

Deal Score0
Deal Score0

Alayum Maname Amaithi Amaithi song lyrics – அலையும் மனமே அமைதி

அலையும் மனமே அமைதி, அமைதி
உணர்ந்திடு இது கடவுள் சந்நிதி
உன்னத இறைவன் உரைக்கும் செய்தி
உள்ளத்தில் பதிந்தால் நிறைவு நிம்மதி

எனக்குக் கூற நினைப்பதெல்லாம்
பேசும் இறைவா பேசும் பேசும்
வாழ்வை வழங்கும் உமது வார்த்தை
தினமும் கேட்டால் போதும் போதும்

கலங்கும் மனமே கவலை எதற்கு
புயலை நினைத்து பயங்கள் எதற்கு?
கடலை அதட்டி புயலை அடக்கும்
கடவுள் உனது படகில் இருக்க

நல்ல நிலமாய் உள்ளம் இருந்து
வல்ல இறைவன் வார்த்தை விழுந்தால்
நாளும் வளர்ந்து உயர்ந்து சிறந்து
நூறு மடங்கு கனிகள் தருவாய்

Alayum Maname Amaithi Amaithi Tamil Christian Devotional Song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo