Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால்
Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால்
அளவில்லா உன் அன்பினால் என்னில் எழுந்து வா என் உயிரின் ஊற்றே தெய்வமே உயிரில் கலந்து வா -2
என் ஆற்றல் நீயே என் அருளும் நீயே என் உயிரும் நீயே உயிர் மூச்சும் நீயே என் வாழ்வும் நீயே என் வழியும் நீயே என் ஒளியும் நீயே எனக்கெல்லாம் நீயே ( அளவில்லா )
நிலவாக நீயும் என்னுள்ளம் வந்தால் என் வாழ்வில் இருளெல்லாம் ஒளியாகிவிடும் -2 அந்த ஒளியிலே நானும் பிறர் வாழ்வில் தீபம் தினம் ஏற்றும் மகிழ்வான நிலையாகிடும் உலகின் ஒளியே என்னுள்ளம் வா உறவின் ஊற்றே எனையாள வா (என் ஆற்றல் )
அழியாத அன்பை தினம் தேடி தேடி அலைகின்ற என் உள்ளம் விரைந்தே நீ வா -2
உந்தன் குறையாத அன்பை நிறைவாக உணர்வேன் ஊரெங்கும் உனதன்பைப் பறைசாற்றுவேன் அன்பாலே எனை ஆள என்னுள்ளம் வா உனதாக எனை மாற்றும் அருளாக வா (என் ஆற்றல் )
Boundless Grace – A Divine Song of Love and Light
Alavilla un Anbinal song