Aarainthu mudiyaah Periya kaariyam song lyrics – ஆராய்ந்து முடியா
Aarainthu mudiyaah Periya kaariyam song lyrics – ஆராய்ந்து முடியா
ஆராய்ந்து முடியா
பெரிய காரியம் செய்பவரே
எண்ணி முடியாத
அதிசயங்கள் செய்பவரே
நீர் நம்பத்தக்கவரே
நன்மைகள் செய்பவரே
இயேசு நம்பத்தக்கவரே
நன்மைகள் செய்பவரே
தேடி வந்த மகனை
ஓடிச்சென்று அணைத்து
முத்தமிட்டு தன்னோடு
சேர்த்துக் கொண்டவரே
நம்பி வந்த அன்னாளின்
ஜெபத்தை நீர் கேட்டு
பதிலாக சாமுவேலை
கொடுத்தவரே
வஸ்திரத்தை தொட்டாலே
சுகமாகும் என்று
நம்பி வந்த பெண்ணிற்கு
அற்புதம் செய்தவரே
இயேசுவே எனக்கு இரங்கும்
என்று அழைத்த குருடன்
பர்திமேயு கண்ணைத் திறந்து
பார்க்கச் செய்தவரே