Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரே
எண்ணி எண்ணி முடியாத
அதிசயம் செய்பவரே (2)
கேட்பதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அதிசயம் செய்வீரே (2)
Chorus:
செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2)
Verse 1:
தள்ளாடும் வயதினிலும்
ஆப்ரஹாம் சாராளுக்கு
அற்புதம் செய்தீரே
ஈசாக்கை அளித்தீரே (2)
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அற்புதங்கள் செய்வீரே
ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2)
Chorus:
செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2)
Verse 2:
தடை செய்த செங்கடலை
அற்புதமாய் பிளந்தீரே
திகைத்து கலங்கி நின்ற
உம் ஜனத்தை நடத்தினீரே (2)
அவ்விதமே தவித்து நிற்கும்
தேவ ஜனம் யாவருக்கும்
தடைகனள உடைப்பீரே
அதிசயம் செய்வீரே (2)
Chorus:
செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே(2)
Verse 3:
வேண்டி கொண்ட அன்னாளுக்கு
சாமுவேலை அளித்தீரே (2)
வேண்டுதல்கள் கேட்டீரே
அற்புதங்கள் செய்தீரே
ஒன்றுக்கும் மேலாக
நன்மைகள் தந்தீரே
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அதிகமாய் செய்வீரே (2)
Chorus:
செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே(2)