ஆராதனை உமக்குத்தான்
அப்பா அப்பா உமக்குத்தான்
எஜமான் நீரிருக்க அடிமை நான் ஆராதிக்க
இரத்தத்தால் கழுவி என்னை
சுத்தமாக மாற்றினீரே – ஆராதனை
சாரோனின் ரோஜாவே
பூத்து குலுங்கும் வாசனையே
உம்மைப்போல் மணம் வீச
யாருண்டு உலகினிலே
சீலோவாம் குளத்தினிலே
கழுவும் போது கண் திறந்தீர்
எப்பத்தா என்று சொல்லி
செவிகளையே திறந்து விட்டீர்
அப்பாவின் பாதத்தில் நான்
அமர்ந்திருந்து பெலனடைந்து
கழுகு போல் சிறகடித்து
உயர உயர பறந்திடுவேன்
அக்கினி அபிஷேகம்
தலைமேல் இறங்கணுமே
தூபமாய் நறுமணமாய்
துதிகளை நான் செலுத்தணுமே