பேதுரு போல வலையை – Pethuru Pola Valaiyai
பேதுரு போல வலையை கழுவினேன் – Pethuru Pola Valaiyai Kazhuvinean Tamil Christian song lyrics, Written tune and sung by J.Ramesh
பேதுரு போல வலையை கழுவினேன்
எனது படகில் அமர்ந்துகொண்டீரே
என்னை சீஷனாக தெரிந்து கொண்டீரே
இராமுழுதும் மீன்கள் அகப்படவில்லை
மனதுக்குள்ளே ஒன்றும் புலப்படவில்லை
எனது படகில் அமர்ந்துகொண்டீரே
என்னை சீஷனாக தெரிந்து கொண்டீரே – 2
பேதுரு போல
1.என்னை அழைக்கும் முன்னே- 2
என் படகை கேட்டதென்ன விந்தையோ
எனது மனதின் ஆழம் காண
அது உமது அனாதி சிந்தையோ
உமது வார்த்தை ஆழம் அதையும் அறியவில்லையே
உமது அன்பை விடவும் கடலும் ஆழம் இல்லையே – 2
உலகை வெறுத்து படகை விலக மறந்திருந்தேனே
வலையும் கிழிந்து போகும் நிலையில் மனதைத் திறந்தீரே- 2
பேதுரு போல
2.சற்றே படகை தள்ளு – 2
என்று சொன்ன வார்த்தை பொருளும் என்னவோ
மனதும் தள்ளி அமர்ந்த போதும்
உமது பார்வை எனது மீதன்றோ
பாவியான என்னை விட்டுப்போக சொன்னேனே
மனிதர்களை பிடிப்பவனாய் மாறிப்போனேனே – 2
பயப்படாதே என்று சொல்லி வழியை தந்தீரே
படகை வலையை துறந்த பின்னே பின்தொடர்ந்தேனே – 2
பேதுரு போல.
பேதுரு போல வலையை கழுவினேன் song lyrics, Pethuru Pola Valaiyai Kazhuvinean song lyrics, Tamil songs
Pethuru Pola Valaiyai Kazhuvinean song lyrics in English
Pethuru Pola Valaiyai Kazhuvinean