தம்பி கேளுடா – Thambi Keluda
தம்பி கேளுடா – Thambi Keluda Social Awareness Tamil Christian song lyrics,Tune and sung by W.Michael Samraj. Composer Thought
பல்லவி
தம்பி கேளுடா தலை நிமிர்ந்து பாருடா
வாழ்க்கை ஒண்ணுதான் அத வீணாக்காதடா
சரணம் 1
அப்பன் ஒழச்ச காசில செருப்ப வாங்கி போட்டு அத
பிளாட்பாரத்துல தேய்ச்சி கால கண்டம் பண்ணிக்காதடா
கடன ஒடன பட்டு ஒனக்கு வாங்கித் தந்த பைக்குல
சீனு ஓட்டி உயிரை பணயம் வெச்சி சாவாதடா
கையி காலு தல திரும்ப ஒனக்கு மொளைக்காது
போனா போனது தான் புரிஞ்சி நடக்க தெரிஞ்சிக்கடா
சரணம் 2
பள்ளிக் கூடம் போற வயச பாழாக்கிப் போடாத
சாதீய சாக்கடையில் விழுந்து நீயும் மடியாதே
சினிமா மோகத்தில் சீரழிந்து போகாதே
எவனோ தலைவனென்று தருதலையாய் திரியாதே
தூரம் வெகுதூரம் வாழ்க்கையில இருக்குதடா
படிப்ப விட்டுப் புட்டா வாழ்க்கை உனக்கு தோல்வியடா.
Thambi Keluda song lyrics in English
Thambi Keluda song lyrics, தம்பி கேளுடாsong lyrics.Tambi Kealuda