அன்பின் ஊற்றே – Anbin Ootre
அன்பின் ஊற்றே – Anbin Ootre Aathiyil Iruntha Vaarthaiyae Tamil Christian Catholic RC song Lyric and Tune by Fr.Antony Soosai ( Germany).
ஆதியில் இருந்த வார்த்தையே சரணம் சரணம் சரணம்
வார்த்தையால் யாவையும் படைத்த வா சரணம்
சரணம் சரணம்
படைப்புகள் அனைத்திலும் உரைபவா சரணம்
சரணம் சரணம்
உன் பதம் பணிந்தோம் என்றுமே சரணம்
சரணம் சரணம்
அன்பின் ஊற்றே அருளின் சுனையே உன்னை நான் பாடுவேன்
வாழ்வாகும் உந்தன் வார்த்தையை கேட்க மகிழ்வுடன் தினம் நாடுவேன் மகிழ்வுடன் தினம் நாடுவேன்
கண்ணின் மணி போல
என்னை தினம் காக்கும்
அன்பு தாய் ஆகினாய்
கடலும் அலையும் நான்
கடந்து சென்றாலும்
எந்தன் துணை ஆகினாய்
அதிகாலை உதயம் அழகான வானம் எல்லாம் உன் புகழ் பாடுதே
இதமாக வீசும் இளங்காலை தென்றலும் எல்லாம் உன் அருள் பாடுதே – 2
அருட்கடலே ஆண்டவனே
அருட்கடலே ஆண்டவனே
எங்கு நோக்கினும் உந்தன் தரிசனம் அழகின் தரிசனம்தான்
சலங்கை ஒலிகளால் இனிய ஜதிகளால் உன்னை பாடுவேன் நான்
அருள்பவனே ஆள்பவனே
அருட்சுடரே அன்பரசே
இசைபாடும் குயிலும்
அசைந்தாடும் மயிலும்
எல்லாம் உன் புகழ் பாடுதே உயர்ந்தோங்கும் மலையும் பாய்ந்தோடும் நதியும்
எல்லாம் உன் அருள் பாடுதே – 2
படைப்புகளில் பரம்பொருளே
மனிதம் என்பதும் புனிதம் என்பதும் உந்தன் தரிசனம் தான்
பாக்கள் பாடுவேன் நடனம் ஆடுவேன் உந்தன் அருளிலே தான்
வாழ்வினிலே அருள் தனையே
மழையெனவே பொழிபவனே
Anbin Ootre Song lyrics in English
Aathiyil Iruntha Vaarthaiyae Saranam Saranam Saranam
Vaarthaiyaal Yavaiyum Padaitha Va Saranam Saranam Saranam
Padaippugal Anaithilum Uraibava saranam Saranam Saranam
Un Patham Paninthom Entrumae Saranam Saranam Saranam
Anbin Ootrae Arulin Sunaiyae Unnai paaduvean
Vaalvagum unthan vaarthaiya Ketka Magilvudan
Thinam Naaduvean Magilvudan Thinam Naaduvean
Kannin Manipola
Ennai thinam Kakkum
Anbu Thaai Aaginaai
Kadalum Alaiyum Naan
Kadanthu Sentralaum
Enthan Thunai Aaginaai
Aathikaalai Uthayam Alagana Vaanam Ellaam Un pugal Paaduthae
Ithamaga Veesum Ilankaalai Ellaam Un Arul Paaduthae-2
Arutkadalae Aandavanae-2
Engu Nokkinum Unthan tharisanam Alagin Tharisanam than
Salangai Olikalaal Iniya Jathikalaal Unnai paaduvean Naan
Arulbavanae Aalbavanae
Arutsudarae Anbarase
Isaipaadum Kuyilum
Asainthadum Mayilum
Ellaam Un Pugal Paaduthae
Uyarnthongum Malaiyum paainthodum Nathiyum
Ellaam Un Arul paaduthae-2
Manitham Enbathum Punitham Unthan Tharisanam Thaan
Paakkal Paaduvean Nadanam Aaduvean
Unthan Arulilaethan
Vaalvinilae Arulthanaiyae
Mazhaiyenavae pozhibavanae
அன்பின் ஊற்றே song lyrics, Anbin Ootre song lyrics.