Thalaimuraiyaai Entrentrumaai – தலைமுறையாய் என்றென்றுமாய்

Deal Score0
Deal Score0

Thalaimuraiyaai Entrentrumaai – தலைமுறையாய் என்றென்றுமாய்

தலைமுறையாய் என்றென்றுமாய்
தேவன் எம் அடைக்கலமானவரே
தஞ்சம் அவரே திரும்பிடுவோம்

  1. பூமி உலகம் உருவாகு முன்னே
    ஆமிவர் அநாதி பிதா
    நேற்றுக் கழிந்த நாள் போலவர் முன்
    நீண்ட ஆயிரம் ஆண்டுகளே
  2. காலை முளைத்து பூத்திடும் புல்லே
    மாலை நேரம் உலர்ந்திடுதே
    வாடும் மனிதர் நாட்கள் மறையும்
    வெள்ளம் போல் எம்மை வாரிக் கொள்வார்
  3. உந்தன் முகத்தின் வெளிச்சத்திலே நீர்
    எந்தன் பாவம் நிறுத்தினீரே
    தேவ கோபத்தால் மாயக்கதை போல்
    பாவ வருடங்களைக் கழித்தோம்
  4. எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டே
    எண்பதாண்டோ பெலன் இருந்தால்
    ஞான இதயம் தேவ உணர்வும்
    நாட்கள் எண்ணிட போதித்திடும்
  5. கர்த்தரே நீர் திரும்பியே வாரும்
    கோபம் நீங்கி பரிதபியும்
    துன்பம் அடைந்த நாட்கள் பதிலாய்
    இன்ப மகிழ்ச்சி ஈந்திடுமே
  6. உந்தன் கிரியை ஊழியர்க்கே தான்
    உம் மகிமை பிள்ளைகட்கே
    எங்கள் கரத்தின் நற்கிரியைகள்
    என்றும் உறுதி செய்தருளும்

Thalaimuraiyaai Entrentrumaai song lyircs in English

Thalaimuraiyaai Entrentrumaai
Devan Em Adaikkalamavarae
Thanjam Avarae Thirumbiduvom

1.Boomi Ulagam Uruvagumunnae
Aamivar Anathi Pitha
Nettru Kalintha Naal Polavar Mun
Neenga Aayiram Aandukalae

2.kaalai Mulainthu Poothidum Pullae
Maalai Neram Ularnthiduthae
Vaadum Manithae Naatkal Maraiyum
Vellam pol Emmai Vaari kolvaar

3.Unthan Mugaththin velichathilae Neer
Enthan Paavam Niruthineerae
Deva Kobathaal Maayakathai pol
Paava varudankalai kalithom

4.Engal Vaalnaal elubathu Aandae
Enbathondo Belan Irunthaal
Ganan Idhayam Deva Unarvum
Naatkal Ennida Pothithidum

5.Kartharae Neer Thirumbiyae Vaarum
Kobam Neengi Parithabiyum
Thunbam Adaintha Naatkal pathilaai
Inba Magilchi Eenthidumae

6.Unthan Kiriyai Oozhiyarkkae than
Um Magimai pillaikatkae
Engal Karathin narkiriyaigal
Entrum Uruthi seitharulum

Chords : R-80’s Fusion T-120 Cm 2/4
Lyrics and sung by Sis.சாராள் நவரோஜி

godsmedias
      Tamil Christians songs book
      Logo