Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு
Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு
அசமந்தமான வாழ்க்கையை விட்டு
நீ எழுந்திடாயோ நீ எழுந்திடாயோ
அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
வெதுவெதுப்பாய் நீ நிற்கின்றாயோ
இது மாறாமல் விமோசனம் இல்லை
செவி கேளாமல் மாற்றங்கள் இல்லை
அவர் வரும் நேரம் நாழிகையும்
குறைவதை ஏனோ அறியவில்லை
மணவாளன் வரும் நேரத்திலே
எண்ணெய் குறைவதை உணர வில்லை
அதிகாலை எழுவது அசமந்தமே
முழங்காலில் நிற்பதும் அசமந்தமே
வேதத்தைப் படிப்பதில் அசமந்தமே
படித்ததை தியானிக்க அசமந்தமே
பாவத்தை வெறுத்திட அசமந்தமே
பரமனை தேடிட அசமந்தமே
அசமந்தமே… அசமந்தமே…
இது மாறாமல் விமோசனம் இல்லை
செவி கேளாமல் மாற்றங்கள் இல்லை
அவர் வரும் நேரம் நாழிகையும்
குறைவதை ஏனோ அறியவில்லை
மணவாளன் வரும் நேரத்திலே
எண்ணெய் குறைவதை உணர வில்லை
ஆலய வருகையில் அசமந்தமே
ஆவியின் ஜீவியம் அசமந்தமே
ஆறுதல் தருவதில் அசமந்தமே
அரவணைப்பிலும் அசமந்தமே
செய்தியை கேட்பதில் அசமந்தமே
சுவிசேஷம் சொல்வதில் அசமந்தமே
அசமந்தமே… அசமந்தமே…
இது மாறாமல் விமோசனம் இல்லை
செவி கேளாமல் மாற்றங்கள் இல்லை
அவர் வரும் நேரம் நாழிகையும்
குறைவதை ஏனோ அறியவில்லை
மணவாளன் வரும் நேரத்திலே
எண்ணெய் குறைவதை உணர வில்லை
வெறுமையை உணர்வதில் அசமந்தமே
வேண்டுதல் செய்வதில் அசமந்தமே
தீமையைச் சகிப்பதில் அசமந்தமே
தீர்மானம் எடுப்பதில் அசமந்தமே
பெருமை விலக்கிட அசமந்தமே
தாழ்மையை தரித்திட அசமந்தமே
அவர் சாயல் பெற்றிட அசமந்தமே
இது மாறாமல் விமோசனம் இல்லை
செவி கேளாமல் மாற்றங்கள் இல்லை
அவர் வரும் நேரம் நாழிகையும்
குறைவதை ஏனோ அறியவில்லை
மணவாளன் வரும் நேரத்திலே
எண்ணெய் குறைவதை உணர வில்லை
அசமந்தமான வாழ்க்கையை விட்டு
நீ எழுந்திடாயோ நீ எழுந்திடாயோ
அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
வெதுவெதுப்பாய் நீ நிற்கின்றாயோ
அசமந்தமான