Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு

Deal Score0
Deal Score0

Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு

ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு தான்
அன்பு காட்டும் நேசர் நீரே ஆராதனை உமக்கு தான்
பாவி என்னை கண்டவரே
மீட்டெடுத்த இரட்சகரே
பரிசுத்தமானவரே ஆராதனை உமக்கு தான்

1.பாவ சேற்றினிலே புறன்டு கிடந்த என்னை
பாசமா கரம் பிடிச்சு தூக்கி எடுத்தவரே
அலங்கோலமாக நானும் அலைஞ்சு திரிகையிலே
நேசர் என்னை அரவனைச்சு அடைக்கலம் தந்தீரய்யா
தேடிவந்த தெய்வமே எந்தன் இயேசப்பா
விட்டு விலகாதவரும் நீங்கதானப்பா

2.என்னோட சொந்தமெல்லாம்
வெறுத்து போகயில
எந்த நிலையிலுமே
நீங்கமட்டும் வெறுக்கவில்லை
நான் நம்பும் மனிதரெல்லாம்
துரோகம் செய்கையில்
நானிருக்கேன் பயப்படாதே என்று சொன்னவரே
எனக்கு சொந்தமெல்லாம் நீங்கதானப்பா
எனது நம்பிக்கையும் நீங்க இயேசப்பா

3.ஏளனமா பார்த்த கண்கள்
ஆச்சரியமா பார்க்க செய்தீர்
நிந்தைகளை சொன்ன நாவும் மேன்மையா
பேசவைத்தீர்
உம்சேவை செய்வதற்க்கு தகுதியும் தந்தீரய்யா
உம்மோடப் பிள்ளை என்னை உயர்த்தி வைத்தீரய்யா
என்ன தவம் செய்தேனோ எனக்கு தெரியல
இயேசப்பா உம்மைப் போல யாருமே இல்ல

Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics in english

Aadharava irupavare
Aaradhanai Umakkuthan
Anbu kaatum nesar neere
Aaradhanai Umakkuthan
Paavi ennai kandavare
Meettedutha ratchagare
Parisuthamanavare
Aaradhanai Umakkuthan

1.Paava setrinile purandu kidandha ennaa
Paasama karam pidichu thookki eduthavare
Alangolamaaga naanum alainji thirigayile
Nesar enna aravanaichu adaikalam thandheeraiyya
Thedi vandha dheivame endhan yesappaa
Vittu vilagadhavarum neengadhaanappa

2.Ennoda sondhamellam veruthu pogayilla
Endha nilayilume neenga matum verukkavilla
Naan nambum manidharellam dhrogam seygayile
Naanirukken bayapadadhe endru sonnavare
Enaku sondhamellam neengadhaanappa
Enadhu nambikkai um neenga yesappaa

3.Yelanamaa paartha kangal aacharyamaa paarka seidheer
Nindhaigalai sonna naavum menmayaa pesa veitheer
Um sevai seivadharku kirubaiyum thandheeraiyya
Ummoda pillai enna uyarthi veitheerayya
Enna thavam seydheno enakku theriyalaa
Yesappaa ummai pola yarume illaa

Jeba
      Tamil Christians songs book
      Logo